எவரெஸ்ட் சிகரம் அருகே மலையேற்றத்தில் ஈடுபட்ட 76 வயது ஹேரி டான் கடந்த வாரம் காணாமல் போனார்.
அவரை மீட்க ஒரு வாரத்திற்கு மேலாக மீட்புப்படையினர் போராடினர். இந்நிலையில், டானின் சடலத்தை வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியரான டான் செப்டம்பர் 26ஆம் தேதி நேப்பாளத்தில் உள்ள கொங்மா லா கணவாய் அருகே மலையேற்றத்தில் ஈடுபட்டார்.
கிட்டத்தட்ட 5,500 மீட்டர் உயரம் கொண்ட அந்த மலை எவரெஸ்ட் சிகரத்தின் தென் திசையில் உள்ளது.
மலையேற்றத்தின்போது டான், தவறி கீழே விழுந்ததாகவும் தற்போது அவரின் சடலத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.