இந்த விமானம் மதுரையிலிருந்து புறப்பட்டது

சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக ஏவப்பட்ட போர் விமானங்கள்

1 mins read
5d69f3b8-cdaa-4c45-b6fc-2ec2ba91708c
சிங்கப்பூரை நோக்கி வந்த AXB684 என்ற அந்த விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக அந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல்வழி தகவல் கிடைத்தது - படம்: ஃபேஸ்புக் / தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சிங்கப்பூர் ஆகாயப்படை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) இரவு எஃப்15 ரக போர் விமானங்களை உடனே முடுக்கிவிட்டது.

சிங்கப்பூரை நோக்கி வந்த AXB684 என்ற அந்த விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக அந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல்வழி தகவல் கிடைத்தது. இந்த விமானம் மதுரையிலிருந்து புறப்பட்டது.

“எங்கள் சிங்கப்பூர் ஆகாயப்படையின் எஃப் 15 ரக போர் விமானங்களில் இரண்டு அவசரமாக ஏவப்பட்டு, மக்கள் கூட்டம் இல்லாத பகுதியில் விமானத்தை பாதுகாப்பாக வழிநடத்தி, இறுதியாக இன்று இரவு 10.04 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கியது,” என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்