பூன் லே டிரைவ் வட்டாரத்தில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் 32 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்தான ஆயுதங்களால் வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றத்திற்காக அந்த நபர் மீது டிசம்பர் 13ஆம் தேதி குற்றம்சாட்டப்படவிருப்பதாக டிசம்பர் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
பூன் லே டிரைவ், புளோக் 188ன் வெற்றுத் தளத்தில் இரவு 7.00 மணியளவில் 58 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயத்துடன் காணப்பட்டார். இதையடுத்து 58 வயது சந்தேக நபருக்கு காவல்துறை வலை வீசியது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனயில் சேர்க்கப்பட்டார்.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்தி, ஒரு வெட்டரிவாள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டு சிறை, பிரம்படி, அபராதம் அல்லது இவற்றில் இரண்டு அல்லது மூன்றும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.
இந்த நிலையில் சமூகத்தில் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று அறிக்கையில் காவல்துறை எச்சரித்திருந்தது.
சட்டத்தை மதிக்காமல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியது.

