பூன் லேயில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு

1 mins read
f8ecfb27-3ce3-4cf0-b442-2fb7454c345a
சில பேருந்துக்கான வரிசைகள் பலமீட்டர் தூரத்திற்கு நீண்டு இருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பூன் லே பேருந்து முனையத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) காலை மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்துகளுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பூன் லே பேருந்து முனையத்திற்குள் பேருந்துகள் நுழையும் சாலையின் வலது தடத்தில் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் காத்திருந்தக் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்குச் சொந்தமான எண் 187 பேருந்து காலை 6.15 மணி வாக்கில் 3 ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் சாலையிலிருந்து ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 64 நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நின்றது.

அதனால் எண் 172, 178, 179, 180, 187, 240, 241, 251, 252 பேருந்துகளின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பேருந்து 8.50 மணி வாக்கில் சாலையிலிருந்து அகற்றப்பட்டது.

செய்தியை அறிந்து காலை 8 மணிவாக்கில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களும் அங்குச் சென்றனர். சில பேருந்துக்கான வரிசைகள் பலமீட்டர் தூரத்திற்கு நீண்டு இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்