ஆர்க்கிட் கண்காட்சியில் பரிசுகளை அள்ளிய சிங்கப்பூர் பூமலை, கரையோரப் பூந்தோட்டங்கள்

ஆர்க்கிட் கண்காட்சியில் பரிசுகளை அள்ளிய சிங்கப்பூர் பூமலை, கரையோரப் பூந்தோட்டங்கள்

1 mins read
64a3dd5e-6186-4801-a0b1-be34bb750cca
ஆர்க்கிட் தோட்டம் அமைக்கும் போட்டியில் சிங்கப்பூர் பூமலை முதல்பரிசு பெற்றது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய பசிபிக் ஆர்க்கிட் மாநாட்டில் சிங்கப்பூர் பூமலையும் கரையோரப் பூந்தோட்டங்களும் மிகப் பெரிய கௌரவத்தைப் பெற்றன. அவை அங்கு தாவரக்கலப்புத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் மலர்க்காட்சி அமைக்கும் திறனையும் வெளிப்படுத்தின.

கிட்டத்தட்ட 700 பொழுதுபோக்குக்காகப் பூந்தோட்டம் வைத்திருப்பவர்களும், தொழில்முறை விவசாயிகளும் தங்களிடம் உள்ள சிறந்த ஆர்க்கிட் செடி வகைகளைச் சிங்கப்பூர் எக்ஸ்போவில் புதன்கிழமை நடந்த மாநாட்டில் காட்சிப்படுத்தினர்.

அங்கு100க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்த மாநாட்டை சிங்கப்பூர் ஏற்று நடத்துவது இதுவே முதல்முறை.

ஆர்க்கிட் தோட்டம் அமைக்கும் போட்டியில் சிங்கப்பூர் பூமலை முதல்பரிசு பெற்றது. இந்தப் போட்டியின் பங்கேற்பாளர்கள் 25 சதுர மீட்டர் கொண்ட தோட்டத்தை உருவாக்க வேண்டும்.

சிங்கப்பூர் பூமலையிலிருந்தும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் ஆர்க்கிட் செடி வளர்ப்பவர்களிடமிருந்தும் 76 வகை ஆர்க்கிட் இனங்களும் கலப்பினங்களும் சிங்கப்பூரின் ஆர்க்கிட் பாரம்பரியத்தையும் உலக நாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவையும் வெளிப்படுத்தும் வகையில் அந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டன. 

குறிப்புச் சொற்கள்