ஈசூன் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கார் நிறுத்துமிடம் ஒன்றில் விபத்து நிகழ்ந்தது.
அதில் 9 வயது சிறுவன் ஒருவனுக்குக் காயம் ஏற்பட்டதாகவும் சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்விபத்து புதன்கிழமையன்று (மே 22) 437 ஈசூன் அவென்யூ 6ல் நிகழ்ந்தது. விபத்து குறித்து பிற்பகல் 3.05 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. சிறுவன் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அது கூறியது.
சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அது 80,000க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
சென்ற 2023ஆம் ஆண்டு காயம் விளைவித்த 6,944 சாலை விபத்துகள் நிகழ்ந்தன என்று கடந்த பிப்ரவரி மாதம் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்திருந்தது.

