அன்பளிப்பு பொட்டலங்களுடன் வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்த சிறுவன்

அன்பளிப்பு பொட்டலங்களுடன் வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்த சிறுவன்

1 mins read
878334b1-77b2-4a6d-a6aa-da86c7ed66a9
வெளிநாட்டு ஊழியர் ஒருவரிடம் அன்பளிப்பு பொட்டலத்தை வழங்கிய நான்கு வயது சிறுவன் கே‌‌ஷவ். படம்/செய்தி: மதர்‌ஷிப் இணையத் தளம் -

பள்ளி விடுமுறையின்போது மாணவர்கள் பலரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட, நான்கு வயது சிறுவனான கே‌‌ஷவ் அறக்கட்டளை முயற்சியில் ஈடுபட்டான்.

தம் பிறந்தநாளின்போது கிடைத்த ரொக்கப் பணத்தை கொண்டு அவன் வெளிநாட்டு ஊழியர்களுக்காக '100 பிளஸ்' பானங்கள், பிஸ்கெட்டுகள், கிருமி நாசினிகள் ஆகியவற்றை வாங்கினான்.

தம் தங்கையுடனும் பெற்றோருடனும் சென்று வாங்கிய பொருட்களை 100 பொட்டலங்களில் நிரப்பினான்.

அவற்றை தம் வீட்டின் அருகாமையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்களிடம் நேரடியாக கொடுத்து அவர்களை மகிழ்வித்தான் கே‌‌ஷவ்.

மேலும் போலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த அன்பளிப்பு பொட்டலங்களை அச்சிறுவன் தந்தான்.

இந்த 100 பொட்டலங்களையும் விநியோகம் செய்ய சிறுவனுக்கு ஒரு வாரம் ஆனது.

இம்முயற்சியை எப்பொழுதும் தொடர கே‌ஷவ்வின் குடும்பத்தினர் விரும்புகின்றனர்.