பராமரிப்பு நெறிமுறை மீறப்பட்டதால் வட்ட ரயில் பாதையில் தடங்கல் ஏற்பட்டது: எஸ்எம்ஆர்டி

பராமரிப்பு நெறிமுறை மீறப்பட்டதால் வட்ட ரயில் பாதையில் தடங்கல் ஏற்பட்டது: எஸ்எம்ஆர்டி

1 mins read
66ab43b0-e980-4523-8283-83503ba1665d
ரயில் சேவை நேரத்தின் போது பராமரிப்பு பணியில் இருந்த குழு தகுந்த அனுமதி இல்லாமல் மின் கட்டமைப்பில் சாதனங்களை மாற்றியதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. - படம்: ஃபேஸ்புக்

வட்ட ரயில் பாதையில் செப்டம்பர் 17ஆம் தேதி மின் கோளாறு காரணமாக ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

தடங்கலுக்கு காரணம் பராமரிப்பு நெறிமுறை மீறப்பட்டதுதான் என்று எஸ்எம்ஆர்டி வியாழக்கிழமையன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ரயில் சேவை நேரத்தின் போது பராமரிப்பு பணியில் இருந்த குழு தகுந்த அனுமதி இல்லாமல் மின் கட்டமைப்பில் சாதனங்களை மாற்றியதாக அது கூறியது.

டிஎஸ்எஸ்எஸ் என்றழைக்கப்படும் பாதுகாப்புக் கட்டமைப்பில் சாதனம் மாற்றும்போது மின் கோளாறு ஏற்பட்டதாக எஸ்எம்ஆர்டி விளக்கியது.

பிரதான கட்டமைப்பில் சாதனத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் போது இரண்டாவது கட்டமைப்பில் மின் கோளாறு ஏற்பட்டது. அதனால் சேவை மீண்டும் வழக்கநிலைக்கு திரும்பக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது என்று எஸ்எம்ஆர்டி ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

இந்த தடங்கலால் கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்