நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தில் 1972ஆம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரை பிரதிநிதித்தவர் பி.சி.சுப்பையா, 75. தேசிய அளவில் 10,000மீட்டர் போட்டிகளில் ஆக வேகமான நேரத்தை பதிவுசெய்து சாதனை படைத்தவர் அவர். இன்றும் தினந்தோறும் 5 முதல் 10 கிலோமீட்டர் வரை அவருக்குப் பிடித்தமான தடத்தைச் சுற்றி ஓடுகிறார். - படம்: ஏஐசி
Break the Silver Ceiling
The "Silver Roof Breaking" movement, launched by the AIC, aims to challenge ageist perceptions. Through the "One Picture at a Time" project, the movement showcases the active lifestyles of seniors, proving that age is merely a number. The photo exhibition from October 1st to 6th at Our Tampines Hub highlights the dynamic and diverse experiences of aging seniors.
Generated by AI
சிங்கப்பூரில் மூப்படைதல் என்றால் என்ன என்பதன் அர்த்தத்தை மாற்றியமைக்கும் தருணம் இது. மூப்படைதலின் கண்ணோட்டத்தை எதிர்கொண்டு நலமாக மூப்படைதலை அரவணைக்க முற்படுவோம். “வெள்ளி கூரை உடைப்போம்” என்பது ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (ஏஐசி) 2024ஆம் ஆண்டில் தொடங்கியுள்ள இயக்கம். மூத்தோர் என்பவர் தங்களின் வயதால் என்ன செய்யமுடியும், என்ன செய்ய முடியாது எனும் கண்ணோட்டத்தைத் தகர்த்தெறியவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் ஒரு முயற்சியாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை “வெள்ளி கூரை உடைத்தல்: ஒரு நேரத்தில் ஒரு படம்” எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. துடிப்புமிக்க மூத்தோர் தங்களின் நடவடிக்கைகள் மூலம் வயதை ஒரு பொருட்டாக எண்ணாமல் எவ்வாறு தங்களின் வாழ்க்கைமுறையை அமைத்துள்ளனர் என்பதை நிழற்படங்களின் வழியாகக் காட்டும் பெட்டகமே இந்தத் தொகுப்பு. வாழ்க்கையின் ரசனையை சுவைத்தபடி, வயது என்பது ஒரு எண் என்பதைத் தவிர அதனால் பின்தங்காமல் மற்றவர்களையும் அவர்களைப் போல வயதானாலும் துடிப்புமிக்கவர்களாக இருக்க உத்வேகம் அளிக்கும் நோக்கில் மனதில் நிலைக்கும் நிழற்படங்கள் இந்தத் திட்டத்தின்மூலம் தொகுக்கப்பட்டுள்ளன.
குத்துப்பாடல்களின் மேல் அளவிலா பிரியமுள்ள 72 வயது ஷீலா மாரியப்பனுக்கு இந்தியப் பாடல்களுக்கேற்ப நடனம் ஆடுவதில் அதீத நாட்டம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இரவுநேரக் கேளிக்கைக் கூடங்களுக்குச் சென்று இரவுமுழுதும் நடனம் ஆடுவதை பொழுது போக்காகவே வைத்துள்ளார் ஷீலா. “சமூக நடவடிக்கைகளை அரவணைப்போம், துடிப்புடன் இருப்போம், ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக்குவோம். இந்த வயதில் நான் நடனம் ஆடுகிறேன், சுற்றுப்பயணம் செல்கிறேன், பிறருக்கு உதவுகிறேன். நம்மை சுற்றி உள்ளோரை முழுமையாக வாழ ஊக்கமளிப்போம். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கே. ஆக, மறக்கமுடியாததாக்குவோம். என்றும் புன்னகைப்போம்,” என்கிறார் ஷீலா. - படம்: ஏஐசி
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தம்பதியராக உள்ளனர் தேவன், 63, சூ சின், 62. நாய்கள் மீதும் கலைகள் மீதும் இருவருக்கும் உள்ள அன்பு இருவரின் நேருக்கத்திற்கு வலுச்சேர்த்துள்ளது. ஓவியக் கலையில் அதிக ஆர்வமுள்ள, உயிரோவிய கலைக்கூடத்தின் முன்னாள் நிர்வாகியான தேவன். நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர் சூ சின். இருவரும் தங்களது செல்லப்பிராணியான ஹோப் மீது வைத்திருக்கும் அன்பும் ஒருவருக்கொருவருடனான அரவணைப்பும் மனநிம்மதியைத் தருகிறது. - படம்: ஏஐசி
1905ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்பளம் விற்கும் தொழிலின் நான்காம் தலைமுறை உரிமையாளர் சிப்கத்துல்லா, 65. நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட கம்பளங்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்சொல்வதில் மகிழ்ச்சி கொள்பவர் இத்தொழிலில் அதீத ஆர்வமுள்ள இவர். பிரிட்டிஷ் அரச குடும்பம், இஸ்தானா, புகழ்பெற்றவர்கள் இவரின் வாடிக்கையாளர்களில் அடங்குவர். வாடிக்கையாளர்களின் புன்னகையில் மனநிறைவு கொள்கிறார். - படம்: ஏஐசி
மரபுடைமை மீதும் கலாசாரம் மீதும் இருக்கும் அளப்பரிய நாட்டமே 61 வயது அஸ்ரா மொயிஸை அரும்பொருளகத் தொண்டூழியராவதற்கு முனைப்பைத் தந்தது. சிங்கப்பூரின் தொன்மைமிக்க, பிண்ணிப்பிணையப்பட்ட வரலாற்றை மற்றவர்களுடன் பகிர்வதில் அவருக்குக் கொள்ளை மகிழ்ச்சி. அந்தத் தகவல்களை அறிந்து மற்றவர்கள் அடையும் திருப்தியும் ஆர்வமும் புதிதாகக் கற்றுகொண்ட நிறைவும் இவருக்கு உந்துதலாக அமைகிறது. - படம்: ஏஐசி
அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நிழற்படக் கண்காட்சி
மூப்படைதல் என்றால் என்ன என்பதை மூத்தோர் எவ்வாறு மாற்றி அமைத்துள்ளனர் என்பதைக் கண்டறியுங்கள்.
“வெள்ளி கூரை உடைத்தல்: ஒரு நேரத்தில் ஒரு படம்” எனும் நிழற்படக் கண்காட்சியைக் காணுங்கள்.
அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நமது தெம்பனிஸ் நடுவத்தின் ‘ஃபெஸ்டிவல் வால்க்’ல் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.