தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூன் லே வீட்டில் இறந்து கிடந்த ஆடவர்; 58 வயது சகோதரர் கைது

1 mins read
6707f08e-7575-48c7-8052-665c21213d82
புளோக் 187 பூன் லே அவென்யூவில் உள்ள 11வது மாடி வீட்டிலிருந்து மாலை 5.30 மணிக்கு உடல் ஒன்றைக் கொண்டு செல்லும் அதிகாரிகள். - படம்: சாவ் பாவ்

பூன் லேயில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) ஆடவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய 58 வயது சகோதரர் கைது செய்யப்பட்டார்.

புளோக் 187 பூன் லே அவென்யூவில் உள்ள அந்த 11வது மாடி வீட்டில் 56 வயது ஆடவர் அசைவின்றிக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

முற்பகல் 11.35 மணியளவில் உதவி கோரி தனக்கு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது. இறந்தவருக்கும் கைது செய்யப்பட்டவருக்கும் ஒருவரையொருவர் தெரியும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவ்விருவரும் சகோதரர்கள் என அறியப்படுகிறது.

சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

மாலை 5.25 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, காவல்துறை அதிகாரிகள் சிலர் அந்த வீட்டிற்கு வெளியே காணப்பட்டனர். அந்த வீட்டு வாசலைச் சுற்றி தடுப்பு போடப்பட்டிருந்தது.

மாலை 5.30 மணிக்கு அந்த வீட்டிலிருந்து உடல் ஒன்று வெளியேற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்