தியோங் பாரு வீவக வீடுகளுக்குப் பழுப்பு நிறத்தில் சாயம்

1 mins read
dc0f0ddf-ea71-4cd4-9081-6e5d31e86dc0
புளோக்குகளுக்குப் பூசப்பட்ட ஊதா நிறம் தொடர்பில் குடியிருப்பாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தியோங் பாரு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) 14 புளோக்குகளுக்குப் பூசப்பட்ட ஊதா நிறம் தொடர்பில் குடியிருப்பாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அது விவாதத்தையும் கிளப்பி விட்டது. இப்போது அவை புதிய நிறத்தில் - பழுப்பு (Brown) நிறத்தில் பூசப்பட உள்ளன.

மே 26 முதல் 28 வரை நடைபெற்ற ஒரு வாக்கெடுப்பின் மூலம் குடியிருப்பாளர்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்ட பின்னர், புதிய வண்ணம் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், புளோக்குகளுக்கான வண்ணம் குறித்து தங்கள் கருத்துகள் கேட்கப்படவில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறி, தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.

அந்த சலசலப்பைத் தொடர்ந்து, குடுயிருப்பாளர்கள் விரும்பும் வண்ணத்தை முடிவுசெய்ய ஒரு கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்று தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செக்ஸியாங் முடிவுவெடுத்தார்.

அதன்படி, பழுப்பு நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்