சிங்கப்பூரின் 60வது தேசிய தின அணிவகுப்பை நேரில் காண புருணை சுல்தான் ஹசனல் போல்க்கியாவும் அவரது துணைவியார் ஹாஜாரா சலேஹாவும் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று அவர்கள் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்கின்றனர்.
இது சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிக்கிறது.
வர்த்தகம் மற்றும் முதலீடு, நாணயப் பரிமாற்றம், தற்காப்பு, மக்களிடையிலான உறவுகள் போன்றவற்றில் இருநாடுகளுக்கும் இடையே மிக நெருங்கிய உறவு உள்ளது.
இதற்கு முன்பு ஆகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் புருணை அரசரும் அரசியாரும் கலந்துகொண்டனர்.