தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜிஐசி நிறுவனத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாக பிரயன் இயோ

1 mins read
eb68d8a0-67de-4ed3-a130-abe6e41aa6fc
திரு பிரயன் இயோ ஜிஐசி முதலீட்டு நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாக ஏப்ரல் 1ஆம் தேதி பதவியேற்பார். - படம்: ஜிஐசி

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிதி நிறுவனமான ஜிஐசியின் மூத்த நிர்வாக அமைப்பில் இரு தலைமைத்துவப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய துணை தலைமை முதலீட்டு அதிகாரியான பிரயன் இயோ நிதியத்தின் மொத்த முதலீட்டு தொகுப்பை மேற்பார்வையிடும் விதமாக தலைமை முதலீட்டு அதிகாரியாக பொறுப்பேற்பார்.

அவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்த டாக்டர் ஜெஃப்ரி ஜெயின்சுபாகிஜ் ஓய்வுபெறுவதால் அந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். டாக்டர் ஜெஃப்ரி ஜெயின்சுபாகிஜ் நிறுவனத்தின் ஆலோசகராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்