சீனப் புத்தாண்டை முன்னிட்டு வசதி குறைந்தோருக்கு சிங்கப்பூர் பௌத்த அறநிறுவனம் ஆண்டுதோறும் ‘ஹொங்பாவ்’ பணமுடிப்பு வழங்கி வருகிறது.
இவ்வாண்டு பணமுடிப்பு வழங்கும் பணியை அது சனிக்கிழமை (ஜனவரி 11) தொடங்கியது.
கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாது ரிவர் வேலியில் இருக்கும் அறநிறுவனத்தின் கட்டடத்தில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
ஒவ்வொருவருக்கும் தலா $300 வழங்கப்பட்டது.
அடுத்த வாரம், 50 இல்லங்களில் உள்ள 8,200 மூத்தோருக்கு அறநிறுவனத்தின் ஊழியர்களும் தொண்டூழியர்களும் பணமுடிப்பு விநியோகிப்பர்.
ஒவ்வொரு மூத்தோருக்கு தலா $20 வழங்கப்படும்.
அத்துடன் சேர்த்து, ஆரஞ்சுப்பழங்களும் சீனப் பாரம்பரிய ரொட்டியும் வழங்கப்படும்.
இவ்வாண்டு ஏறத்தாழ 12,000 பேருக்கு $1.3 மில்லியன் பெறுமானமுள்ள பணமுடிப்பு விநியோகிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது எட்டு விழுக்காடு அதிகம்.
சிங்கப்பூர் பௌத்த அறநிறுவனத்தில் நன்கொடையாளர் கேடய கூடாரத்தைக் கல்வி அமைச்சர் ஜனவரி 11ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
பணமுடிப்பு விநியோகத்திலும் அவர் கலந்துகொண்டார்.

