2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் பிப்ரவரி 12ஆம் தேதி (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்ட அறிக்கையைப் பிரதமர் வோங் வாசிப்பது வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒலி, ஒளிபரப்பப்படும் என்று திங்கட்கிழமையன்று (டிசம்பர் 29) நிதி அமைச்சு தெரிவித்தது.
இணையம் மூலமாகவும் https://www.singaporebudget.gov.sg என்னும் தளத்தில் அவரது உரையைக் காணமுடியும்.
வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் முழு விவரங்கள் சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்ட இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளையும் யோசனைகளையும் ரீச் பட்ஜெட் 2026 குறுந்தளம், ரீச் சிங்கப்பூர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்கள், ShareYourViews இணையப்பக்கம் ஆகியவற்றின் வழியாக ஜனவரி 12ஆம் தேதிவரை தெரிவிக்கலாம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

