பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங், 2025 நிதியாண்டுக்கான சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை 2025 பிப்ரவரி 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் வெளியிடுவார்.
வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்படும்.
வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், அதன் முழு அறிக்கை சிங்கப்பூர் பட்ஜெட் இணையப்பக்கத்தில் கிடைக்கப்பெறும்.
இந்நிலையில், வரவுசெலவுத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டறிய, மக்கள் கழகத்துடனும் அதன் அடித்தள அமைப்புகளுடனும் சேர்ந்து நிதி அமைச்சு 2025 ஜனவரி 12ஆம் தேதி வரை செயல்படும்.
நேரடியாக கருத்து கூற விரும்புவோர், ஜனவரி 16ஆம் தேதி ஒன் ராஃபிள்ஸ் பிளேசில் நடைபெறும் நிகழ்வில் அவ்வாறு செய்யலாம்.
பிரதமராக திரு வோங் ஆற்றும் முதல் வரவுசெலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவினம், வேலைப் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் குறித்து பேசப்படலாம்.

