திறன்களைக் கற்றுக்கொள்வதற்குத் தேவையான வாய்ப்புகளைப் பெறுவதற்கு வேலையும் அலுவலகத் தலைமைத்துவமும் வாய்ப்பளிக்கிறதா என்பது ஆராயத்தக்கது.
அதிகாரப் படிநிலைகள் குறைவாக உள்ள நிறுவனங்களிலும் பணியாளர்களின் மீது நம்பிக்கை வைத்துக் கூடுதல் பணிகளுக்கு அதிகாரமளிக்கும் நிறுவனங்களிலும் பணியாளர்கள் தலைவர்களாக உருவாவதற்கு அதிக வாய்ப்பு பெறுவர் என்று மனிதவள நிறுவனமான ரென்ஸ்டேட்டின் சிங்கப்பூருக்கான இயக்குநர் டேவிட் பிலாஸ்கோ தெரிவித்தார்.
தொழில்நுட்பம், நிதித் தொழில்நுட்பம், காப்பீடு, ஆலோசனைத் துறைகள் போன்ற நிறுவனங்களில் இத்தகைய வாய்ப்புகள் கூடுதலாக இருப்பதாக அவர் கூறினார்.
பெரிய நிறுவனங்கள், பலதரப்பட்ட பணிகளைச் சுழற்சி முறையின்கீழ் வழங்குவதன்வழி பண நிர்வாகம், மக்கள் நிர்வாகத்துக்கான வாய்ப்புகளை இளவயது ஊழியர்களுக்கு வழங்குகின்றன.
தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க விரும்புவர்கள் தங்கள் ஆர்வத்தையும் தயார்நிலையையும் தாங்களாகவே வெளிப்படு்த்தலாம் என்று ஈத்தோஸ் பெத்சேப்மன் நிறுவனத்தின் வர்த்தகச் செயல்பாட்டு ஆட்சேர்ப்பு இயக்குநர் ஜில்லியன் யாப் தெரிவித்தார்.
“பெரும் மாற்றங்கள் சம்பந்தப்பட்ட பணித்திட்டங்களுக்கு உங்களது திறன்கள் தேவைப்பட்டால் அதற்குத் தலைமை தாங்க உங்களை நீங்களே முன்மொழியலாம்,” என்று திருவாட்டி ஜில்லியன் கூறினார்.
இருந்தபோதும் தலைமைத்துவ மாற்றத்திற்கு நன்கு திட்டமிடாத முதலாளிகளால், சிறந்த நிர்வாகத் திறனுள்ள ஊழியர்களுக்குச் சில நேரங்களில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் நழுவக்கூடும் என்று திருவாட்டி யிப் குறிப்பிட்டார்.
அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்று அதன் நிர்வாகத்தினர் எண்ணும்போது வெளியிலிருந்து நிர்வாகிகளைப் பணியமர்த்துவர்.
தொடர்புடைய செய்திகள்
தலைவர்களாக உயர விரும்புவோருக்கு வேலையில் திறமை இருந்தால் மட்டும் போதாது. நல்லமுறையில் மக்களை நிர்வகித்தல், வழிகாட்டுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல் போன்ற திறன்கள் அவசியம் என்பது வல்லுநர்களின் கருத்து.

