தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை நவம்பர் 14 முதல் சில நாள்களில் முன்கூட்டியே முடிவுறும்

1 mins read
792736ce-f542-49cf-9e3a-5c9137873311
ரயில் பாதையின் சமிக்ஞை முறையின் புதுப்பிப்பையும் புதிய, மறுசீரமைக்கப்பட்ட இலகு ரயில்களின் சோதனையையும் ஒருங்கிணைக்க இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. - படம்: சாவ் பாவ்

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் சேவை 2024 நவம்பர் 14 முதல் 2025 அக்டோபர் 31 வரை வியாழக்கிழமைகள் முதல் ஞாயிற்றுக்கிழமைகள் வரை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே, அதாவது இரவு 10.30 மணிக்கு முடிவுறும்.

அந்த ரயில் பாதையின் சமிக்ஞை முறையின் புதுப்பிப்பையும் புதிய, மறுசீரமைக்கப்பட்ட இலகு ரயில்களின் சோதனையையும் ஒருங்கிணைக்க இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) தெரிவித்தன.

பொது விடுமுறை நாள்களில் ரயில் சேவைகள் முன்னதாகவே முடிவுற மாட்டா என அவை கூறின.

புக்கிட் பாஞ்சாங் ரயில் பாதையில் கடந்த இரு மாதங்களில் இருமுறை சேவைத் தடங்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரவு 10.30 மணிக்குப் பிறகு பயணம் மேற்கொள்வோர் புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங் பேட்டைகளுக்குச் சேவையாற்றும் 67, 171, 920, 922, 960, 963, 972, 972M, 973, 974, 976 ஆகிய பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

இந்தச் சேவைகளை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்காணித்து, சேவைகளின் வருகை சரிசெய்யப்படும் என்று ஆணையம் சொன்னது.

குறிப்புச் சொற்கள்