சிங்கப்பூரில் மாதம் $85,000க்கு வாடகைக்கு விடப்பட்ட வீடு

சிங்கப்பூரில் மாதம் $85,000க்கு வாடகைக்கு விடப்பட்ட வீடு

1 mins read
41a79a92-6d8c-42be-856d-ef33636fc630
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் பூமலை அருகே உள்ள டால்வி எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் மாதவாடகை $85,000 என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது அந்த பங்களாவின் ஓராண்டு வாடகை 1.02 மில்லியன் வெள்ளி ஆகும்.

டால்வி எஸ்டேட் வீட்டுக்கு அடுத்தபடியாக புக்கிட் தீமாவில் உள்ள ஒரியோல் கிரெசன்டில் உள்ள வீட்டுவாடகை மாதம் $80,000ஆக இருந்தது.

சிங்கப்பூரில் தரைவீடுகளுக்கான அதிகமான தேவைக்கான எடுத்துக்காட்டாக இத்தொகை அமைந்தது. தரைவீடுகளுக்கான தேவை 2022ஆம் ஆண்டின் பிற்பாதியில் அதிகரித்து வந்ததாக பிராப்நெக்ஸ் சொத்துச்சந்தை நிறுவனம் கூறியது.

தரைவீடுகளுக்கான வாடகை 2022ன் மூன்றாம் காலாண்டில் அதிவேகமாக 10.9 விழுக்காடு அதிகரித்தது.

இரண்டாம் காலாண்டில் தரைவீடுகளுக்கான வாடகை 3.2 விழுக்காடு கூடியது.

எல்லா தனியார் வீடுகளுக்கான ஒட்டுமொத்த வாடகை 8.6 விழுக்காடு உயர்ந்தது.

வீடுகளை வாடகை எடுப்பதில் அதிகரித்துள்ள ஆர்வம், வாடகை உயர்வு ஆகியவற்றால் உரிமையாளர்கள் தங்கள் வீட்டை விற்பதற்கு பதில் வாடகைக்கு விட முடிவு செய்யலாம் என்று பிராப்நெக்ஸ் கூறியது.

மேலும், வெளிநாட்டிலிருந்து வரும் பணம் படைத்தவர்கள் சொகுசு தரை வீடுகளை எடுக்க விரும்புவதால் அந்த வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று கூறப்பட்டது.