சிலேத்தார் விரைவுச்சாலையில் பேருந்து மற்றும் ஐந்து கார்கள் விபத்தில் சிக்கின. இச்சம்பவம் ஜனவரி 2ஆம் தேதி இரவு நடந்தது.
விபத்து குறித்து தங்களுக்கு இரவு 7.30 மணிவாக்கில் தகவல் வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன. விபத்து புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சாலையில் நடந்தது.
விபத்தில் 19 வயது மோட்டார் சைக்கிளோட்டிக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. அவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டார்.
34 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் சிக்கிய பேருந்து சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்திற்குத் தொடர்புடையது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமூக ஊடகத்தில் விபத்து தொடர்பான காணொளி பகிரப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்து ஒரு தொழிற்சாலைக்குத் தொடர்புடைய வாகனமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

