தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனப் புத்தாண்டுக்கு முன்தினம் பேருந்து, ரயில் சேவை நீட்டிப்பு

1 mins read
31ae20a4-16c7-4f6d-bbe9-b5a87ef3fd80
டௌன்டவுன், வடகிழக்குப் பாதைகளிலும் செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டுக்கு முந்திய நாளான ஜனவரி 28ஆம் தேதி குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில், பேருந்துச் சேவைகள் நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டௌன்டவுன், வடகிழக்குப் பாதைகளிலும் செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் ரயில் சேவை கிட்டத்தட்ட இரண்டு மணி 15 நிமிட நேரம் நீட்டிக்கப்படும் என்று அது கூறியது.

19 பேருந்துச் சேவைகளும் நீட்டிக்கப்படுவதாக, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், ஜனவரி 17ஆம் தேதி தெரிவித்தது.

ஜனவரி 28ஆம் தேதி அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்படும் என்பதால், உச்சநேரத்தில் மட்டும் சேவை வழங்கக்கூடிய ‘எல்சிஎஸ்1’, ‘எல்சிஎஸ்2’ உள்ளிட்ட 22 பேருந்துச் சேவைகள் அவற்றின் மாலை நேரச் சேவைகளை முன்கூட்டியே இயக்கும் என்று கூறப்பட்டது.

இந்தப் பேருந்துச் சேவைகள் காலை நேரம் வழக்கம்போலவே இயங்கும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.

குறிப்புச் சொற்கள்