தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தினத்துக்கு முந்தைய நாள் பேருந்து, ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

2 mins read
51300118-8db6-4e8d-86c6-66709c45f453
தேசிய தினத்துக்கு முந்தைய நாளான ஆகஸ்டு 8ஆம் தேதி இரவு சில பேருந்து, ரயில் சேவைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்

தேசிய தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்டு 8ஆம் தேதி இரவு, சில பேருந்து, ரயில் சேவைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படவிருக்கிறது.

சிட்டி ஹால் ரயில் நிலையத்திலிருந்து கடைசி ரயில் பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு திசைகளிலும் ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் ஆகியவற்றை நோக்கிச் செல்லும் ரயில்களுக்கு இது பொருந்தும்.

வட்ட ரயில் பாதையில் டோபி காட் நிலையத்திலிருந்து ஹார்பர் ஃபிரன்ட் நோக்கிச் செல்லும் கடைசி ரயில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும். எதிர்த் திசையில் கடைசி ரயில் இரவு 11.30க்குப் புறப்படும்.

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையில், உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திலிருந்து கடைசி ரயில் நள்ளிரவுக்குப் புறப்படும் என்றும் பே ஷோர் நிலையத்திலிருந்து பின்னிரவு 12.12 மணிக்குப் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை, சாங்கி விமான நிலைய விரிவாக்கப் பாதை ஆகியவற்றில் சேவை வழங்கும் நேரம் நீட்டிக்கப்படமாட்டாது.

சில பேருந்துச் சேவைகளும் ஆகஸ்டு 8ஆம் தேதி இரவில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேருந்துச் சேவை எண்கள் 300, 301, 302, 307, 938A ஆகியவற்றில் கடைசிப் பேருந்து பின்னிரவு 1.40 மணிக்குச் சுவா சூ காங் முனையத்திலிருந்து புறப்படும்.

உட்லண்ட்சில் பேருந்துச் சேவை எண்கள் 901, 911, 912A, 912B, 913 ஆகியவற்றுக்கான கடைசிப் பேருந்துகள் பின்னிரவு 1.25 மணிக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

பேருந்துச் சேவை எண்கள் 920, 922, 973A ஆகியவற்றுக்கான கடைசிப் பேருந்துகள் புக்கிட் பாஞ்சாங் முனையத்திலிருந்து பின்னிரவு 1.25 மணிக்குப் புறப்படும்.

சுவா சூ காங் ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்துச் சேவை எண் 974Aக்கான கடைசிப் பேருந்து, பின்னிரவு 1.40 மணிக்குப் புறப்படும்.

குறிப்புச் சொற்கள்