தனியார் பேருந்து ஓட்டுநரான 68 வயது சான் குவோக்-ஹிங், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பேருந்தை ஓட்டியபோது கீழே தவறிவிழுந்த தனது கைப்பேசியை எடுக்க முயன்றார்.
அதனால், பேருந்து அவரது கட்டுப்பாட்டை மீறி, எதிரே நின்றிருந்த சிறிய பேருந்தின்மீதும் அதன் 64 வயது ஓட்டுநர்மீதும் மோதியது.
அவ்விபத்தில் பலத்த காயமடைந்த அந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக சானுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை ஜனவரி 23ஆம் தேதி விதிக்கப்பட்டது.
மேலும், எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது.
துவாஸ் சவுத் அவென்யூ 4 நோக்கிச் செல்லும் துவாஸ் சவுத் அவென்யூ 7ல் அச்சம்பவம் நடந்தது.

