தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை: பேருந்துச் சேவைகளில் மாற்றம்

1 mins read
7dd4c308-ce3b-46a7-a403-c399d5b4e669
பேஃபிரண்ட் அவென்யூ, நிக்கல் ஹைவே, நார்த் பிரிட்ஜ் ரோடு, தெமாசெக் பொலிவார்ட் உள்ளிட்ட பகுதிகளில், பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நகர்ப் பகுதிகளில் சில பேருந்துச் சேவைகள் ஜூன் 15, ஜூன் 22ஆம் தேதிகளில் திசை திருப்பிவிடப்படும்.

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகைகள் நடைபெறவிருப்பதே அதற்குக் காரணம்.

பேஃபிரண்ட் அவென்யூ, நிக்கல் ஹைவே, நார்த் பிரிட்ஜ் ரோடு, தெமாசெக் பொலிவார்ட் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படும்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து சேவை எண்கள் 10, 14, 16/16M, 32, 51, 56, 57, 63, 70/70M, 80, 100, 107/107M, 111, 124, 130, 131, 133, 145, 166, 174, 195, 196, 197, 502, 851, 851e ஆகியவை சாலை மூடல் காரணமாகப் பாதிக்கப்படும்.

‘டவர் டிரான்சிட் சிங்கப்பூர்’ பேருந்து சேவை எண்கள் 77, 97, 106, 167, 857 ஆகியவை மாற்றுப் பாதைகளில் செல்லும்.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் பேருந்து சேவை எண்கள் 61, 960, 960e, 961 ஆகியவை சில இடங்களில் நிற்காது.

‘கோ-அஹெட் சிங்கப்பூர்’ பேருந்து சேவை எண்கள் 36ம், 518ம் பாதிக்கப்படும்.

பயணிகள் மேல்விவரங்களுக்கு பேருந்து நிறுவனங்களின் இணையத்தளங்கள் அல்லது சமூக ஊடகத் தளங்களை நாடலாம்.

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு ஆகஸ்ட் 9ஆம் தேதி பாடாங்கிலும், மரினா பே வட்டாரத்திலும் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்