நோன்புப் பெருநாளை முன்னிட்டு கூடுதல் நேரம் ரயில், பேருந்து சேவை

1 mins read
0f12a66d-13db-46b4-be57-db2cd6b9d840
நோன்புப் பெருநாளுக்கு முந்தைய நாள் குறிப்பிட்ட சில பொதுப் போக்குவரத்துச் சேவைகள் கூடுதல் நேரத்துக்கு இயங்கும். - படம்: சாவ்பாவ்

நோன்புப் பெருநாளுக்கு முந்தைய நாள் அதாவது மார்ச் 30ஆம் தேதி பொதுப் போக்குவரத்துச் சேவைகள் கூடுதல் நேரம் நீட்டிக்கப்படுகின்றன.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் குறிப்பிட்ட ரயில் பாதைகள், பேருந்துகள் ஆகியவற்றின் சேவை நேரத்தைக் கூட்டுகிறது.

டௌன்டவுன், நார்த் ஈஸ்ட், செங்காங் - பொங்கோல் ஆகிய பாதைகளில் இலகு ரயில்கள் வழக்கத்தைவிட அரைமணி நேரம் கூடுதலாகச் சேவை வழங்கும்.

மார்ச் 31ஆம் தேதி ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து இறுதி ரயில் நள்ளிரவுக்குப் பின் 12.30 மணிக்குப் புறப்படும்.

அதே நாளில் பொங்கோல் கோஸ்ட் நிலையத்திலிருந்து நள்ளிரவில் இறுதி ரயில் புறப்படும்.

டௌன்டவுன் பாதையில் புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து இறுதி ரயில் நள்ளிரவு 12.03க்கும் எக்ஸ்போவிலிருந்து 12.04க்கும் புறப்படும்.

செங்காங், பொங்கோல் நிலையங்களிலிருந்து இறுதி இலகு ரயில் சேவை முறை பின்னிரவு 1.06க்கும் 1.09க்கும் புறப்படும்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் 9 பேருந்து முனையங்களில் உள்ள பேருந்துச் சேவைகளையும் நீட்டிக்கிறது. பிடோக், பீ‌‌‌ஷான், ஈ‌சூன் ஆகிய முனையங்களிலிருந்து இறுதி பேருந்து பின்னிரவு 1 மணிக்குப் புறப்படும்.

222, 225G, 228, 229, 410W, 114A, 60A, 63M, 325, 315, 291, 292, 293, 232, 238, 804, 812 ஆகியவை பின்னிரவு 1 மணியுடன் சேவையை முடித்துக்கொள்ளும்.

குறிப்புச் சொற்கள்