வழக்கறிஞர் சங்கத்தில் இடம்பெற்ற வேலையிட நடத்தை தொடர்பான விசாரணையின் முடிவுகளைப் பற்றிப் பேச ரகசியச் சந்திப்பு நடத்தப்பட்டது.
வழக்கறிஞர் சங்கத்தில் வேலையிடப் பகடிவதை இடம்பெற்றதாகக் கூறப்படுவதும் அதில் அடங்கும்.
சர்ச்சைகளுக்கான மாற்றுத் தீர்வு நிலையமான மேக்ஸ்வெல் சேம்பர்சில் அச்சந்திப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பலர், தலைமைத்துவத்தின் தவறுகளைப் பற்றிய முழு அறிக்கையை வெளியிடுமாறு குரல் எழுப்பினர். அவ்வாறு செய்யப்படாவிட்டால் வழக்கத்துக்கு மாறான நிர்வாகக் குழுச் சந்திப்பைக் (general meeting) கூட்ட குரல் எழுப்பப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய சந்திப்பை மாலை 7 மணிக்கு முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சந்திப்பு இரவு 9.30 மணிக்குத்தான் முடிந்தது.


