கூ தெக் புவாட் மருத்துவமனை உட்பட என்எச்ஜி ஹெல்த் குழுமத்தின் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களின் அழைப்புச் சேவைகள் தற்காலிகமாகச் செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அழைப்புச் சேவைகளை வழக்கநிலைக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக என்எச்ஜி ஹெல்த் குழுமம் சொன்னது.
இருப்பினும், சேவைத் தடங்கலுக்கான காரணத்தை அது குறிப்பிடவில்லை.
என்எச்ஜி ஹெல்த் குழுமத்தின்கீழ் டான் டோக் செங் மருத்துவமனை, கூ தெக் புவாட் மருத்துவமனை, உட்லண்ட்ஸ் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
குழுமத்தின்கீழ் அங் மோ கியோ, காத்திப் வட்டாரங்களில் உள்ளவை உட்பட 10 பலதுறை மருந்தகங்கள் செயல்படுகின்றன.
நோயாளிகளின் பொதுமக்களும் கூடுதல் உதவிக்குத் தனது இணையத்தளங்கள் உட்பட ஹெல்த்ஹப், என்எச்ஜி ஹெல்த் செயலி ஆகியவற்றை நாடலாம் என்று குழுமம் குறிப்பிட்டது.
சேவைத் தடங்கலுக்கு மன்னிப்புக் கேட்ட குழுமம், இக்கட்டான இந்தச் சூழலில் பொறுமை காக்கும்படியும் அது கேட்டுக்கொண்டது.
