பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஏப்ரல் 24லிருந்து மே 1 வரை பிரசாரக்கூட்டங்களை நடத்தலாம் என்று காவல்துறை புதன்கிழமை (ஏப்ரல் 23) அறிக்கை வெளியிட்டது.
மதிய உணவுநேர பிரசாரக்கூட்டங்கள் நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நடத்தப்படலாம்.
மற்ற பிரசாரக்கூட்டங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அல்லது இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடத்தப்படலாம்.
பள்ளிக் கட்டடங்களில் வாரநாள்களில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பிரசாரக்கூட்டங்களை நடத்தலாம்.
அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் தொடர்பான விவரங்கள் பிரசாரக்கூட்டத்துக்கு ஒரு நாள் முன்பு, அனுமதி விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் முடிந்த பிறகு வெளியிடப்படும்.
இறுதிகட்ட பிரசாரக் கூட்டங்களை (இரவு நேரம்) போட்டியிடும் தொகுதிகளில் நடத்த கட்சிகள் விரும்பம் தெரிவித்துள்ளன.
எந்தக் கட்சி அவ்விடங்களில் பிரசாரக்கூட்டம் நடத்தலாம் என்பதை நிர்ணயிக்க குலுக்கல் முறை நடத்தப்படும்.
மதிய நேரப் பிரசாரக்கூட்டங்களைப் பொறுத்தவரை பிரசார ஓய்வுநாளுக்கு முன்பு கடைசி மூன்று பணி நாள்களுக்கு இந்தக் குலுக்கல் முறை நடத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மே 2ஆம் தேதி பிரசார ஒய்வுநாள்.
மே 3 வாக்களிப்பு தினம்.
அன்று இரவு 8 மணியுடன் வாக்களிப்பு முடிவடைகிறது.
இரவு 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு அடுத்த 30 நிமிடங்கள் வரை தேர்தல் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர், அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் ஒன்றுகூடலாம்.
பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள்:
புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி: புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கம்
புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி: பீக்கன் தொடக்கப்பள்ளி
ஹவ்காங் தனித்தொகுதி: ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி
ஜாலான் காயு தனித்தொகுதி: ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளி
ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி: ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டரங்கம்
கெபுன் பாரு தனித்தொகுதி: மேஃபிளவர் உயர்நிலைப்பள்ளி
மேரிமவுண்ட் தனித்தொகுதி: கத்தோலிக்க ஹை பள்ளி
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி: தடகளப் போட்டிகள் நிலையம் (Home of Athletics)
பைனியர் தனித்தொகுதி: ஜூரோங் வெஸ்ட் விளையாட்டரங்கம்
பொத்தோங் பாசிர் தனித்தொகுதி: செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக்கல்லூரி
குவீன்ஸ்டவுன் தனித்தொகுதி: குவீன்ஸ்வே உயர்நிலைப்பள்ளி
ராடின் மாஸ் தனித்தொகுதி: கான் எங் செங் தொடக்கப்பள்ளி
செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி: எவர்கிரீன் தொடக்கப்பள்ளி
தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி: தெம்பனிஸ் ஸ்திரீட் 22 திடல்
இயோ சூ காங் தனித்தொகுதி: அங் மோ கியோ உயர்நிலைப்பள்ளி
அல்ஜுனிட் குழுத்தொகுதி: டெஃபு அவென்யூ 1க்கும் டெஃபு லேன் 10க்கு இடைப்பட்ட திடல்; சிராங்கூன் விளையாட்டரங்கம்
அங் மோ கியோ குழுத்தொகுதி: அங் மோ கியோ தொழில்துறைப் பூங்கா 2 x அங் மோ கியோ அவென்யூ 5; இயோ சூ காங் விளையாட்டரங்கம்
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி: பீட்டி உயர்நிலைப்பள்ளி; பீஷான் விளையாட்டரங்கம்
சுவா சூ காங் குழுத்தொகுதி: சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி; கான்கார்ட் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள, சுவா சூ காங் அவென்யூ 4 விளையாட்டிடம்
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி: பிடோக் விளையாட்டரங்கம்; விக்டோரியா தொடக்கக்கல்லூரி
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி: தேசியத் தொடக்கக்கல்லூரி; சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்பப் பள்ளி,
ஜாலான் புசார் குழுத்தொகுதி: நார்த்லைட் பள்ளி; ஜாலான் புசார் விளையாட்டரங்கம்
ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி: சைனீஸ் கார்டன் எம்ஆர்டி நிலையத்தை அடுத்துள்ள, பூன் லே வேயில் உள்ள திடல்; புக்கிட் வியூ உயர்நிலைப்பள்ளி
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி: சுவா சூ காங் விளையாட்டரங்கம்; உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கம்
நீ சூன் குழுத்தொகுதி: ஃபுட்சால் அரேனா @ ஈசூன் அருகே ஈசூன் சென்ட்ரல் பகுதியிலுள்ள திடல்; ஈசூன் விளையாட்டரங்கம்
பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி: மெரிடியன் உயர்நிலைப்பள்ளி; தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக்கல்லூரி
பொங்கோல் குழுத்தொகுதி: புளோக் 670 எதிரேயுள்ள எட்ஜ்ஃபீல்டு பிளேன்ஸ் அடுக்குமாடி வாகன நிறுத்தகம்; யூசோப் இஷாக் உயர்நிலைப்பள்ளி
செம்பவாங் குழுத்தொகுதி: உட்லண்ட்ஸ் அவென்யூ 12 அருகேயுள்ள திடல், ; சன் பிளாசாவுக்கு அருகில் உள்ள திடல், விளையாட்டரங்கம்
செங்காங் குழுத்தொகுதி: ஏங்கர்வேல் கிரசண்ட் அருகே உள்ள திடல், வேல்ஸ் கொண்டோமீனியம் அருகே; நார்த் விஸ்தா உயர்நிலைப்பள்ளி
தெம்பனிஸ் குழுத்தொகுதி: தெம்பனிஸ் கான்கார்ஸ் பேருந்து சந்திப்பு நிலையம் அருகில் உள்ள திடல்; விக்டோரியா தொடக்கக்கல்லூரி
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி: டெல்டா ஹாக்கி மைதானம்; கல்வி அமைச்சு (இவான்ஸ்) விளையாட்டரங்கம்
வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி: கிளமெண்டி விளையாட்டரங்கம்; வெஸ்ட் கோஸ்ட் பூங்கா, கார் பார்க்கிங் எண் 3-க்கு அருகில் உள்ள திடல்
மதிய உணவு நேரத் தேர்தல் கூட்டம்: யுஓபி பிளாசாவுக்கு அருகில் உள்ள புரொமனாட் பகுதி; மரினா பே வட்டாரத்தில் உள்ள புல்வெளி