தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

12,000 வேலைகளை உருவாக்குகிறது கேப்பிட்டாலேண்டின் அஸ்காட்

2 mins read
51d1888b-4a8d-4277-953c-bf57029f324e
கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் குழுமத்தின் தங்குவிடுதி வர்த்தகப் பிரிவை முன்னின்று நடத்துகிறது அஸ்காட். - படம்: த அஸ்காட்

கேப்பிட்டாலேண்டின் துணை நிறுவனமான அஸ்காட் வரும் 2028ஆம் ஆண்டுக்குள் தான் புதிதாக நிறுவவிருக்கும் சொத்துகளில் 12,000க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.

கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் குழுமத்தின் தங்குவிடுதி வர்த்தகப் பிரிவை முன்னின்று நடத்துகிறது அஸ்காட்.

புதிதாக 300க்கும் மேற்பட்ட சொத்துகளை அடுத்த மூன்றாண்டுகளுக்குள் நிறுவ அந்நிறுவனம் திட்டமிடுகிறது. அந்தச் சொத்துகளை நிர்வகிக்கப் புதியவர்களை அது நியமிக்கும்.

ஏறத்தாழ 12,000 பேரை அந்நிறுவனம் புதிதாக வேலையில் சேர்த்துக்கொள்ளும். அவர்களில் சொத்து நிர்வாகத் தலைமைத்துவப் பொறுப்புகளில் மட்டும் 1,500 பேர் நியமிக்கப்படுவர்.

இந்த விவரங்களை அஸ்காட் புதன்கிழமை (மே 14) தெரிவித்தது.

புதிய நியமனங்களுக்குத் தயாராகும் வகையில் திறன் மேம்பாட்டு முயற்சிகளைத் தான் தொடங்க இருப்பதாகவும் அது குறிப்பிட்டு உள்ளது.

அஸ்காட் இந்தியாவில் நிர்வகிக்கும் தனது சொத்துப் பட்டியலில் புதிதாக 600 இடவசதிகளைச் சேர்ப்பதற்கான மூன்று புதிய ஒப்பந்தங்களைச் செய்ய இருப்பதாக அறிவித்த ஒரு மாதத்தில் புதிய தகவலை அது வெளியிட்டு உள்ளது.

அவ்வாறு 600 இடவசதிகள் சேர்க்கப்பட்டால் இந்தியாவில் உள்ள அதன் 22 சொத்துகளில் இடம்பெற்று உள்ள இடவசதிகளின் எண்ணிக்கை 6,100க்கு அதிகரிக்கும்.

அவற்றின் மூலம், வரும் 2028ஆம் ஆண்டுக்குள் $500 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டணம் தொடர்பான வருவாயை அது ஈட்டுவதற்கான இலக்கை அந்தக் குழுமம் எட்டும்.

அஸ்காட் ஆக்சலரேட் என்னும் பிரிவு விரைவான திறன் நிர்வாகத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. உயர் பொறுப்புகளில் உள்ள பணியாளர்களைத் தலைமைத்துவப் பதவிகளுக்குத் தயார்ப்படுத்தும் நோக்கம் கொண்டவை அந்தத் திட்டங்கள்.

புதிய மின்னிலக்கக் கற்றல் தளத்தின் ஆதரவைப் பெற்ற அந்தப் பயிற்சித் திட்டங்களை அது விரைவில் தொடங்க உள்ளது. எல்லா வகையான பணிப்பிரிவுகளுக்கும் அதில் பயிற்சி வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்