தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கேபிஇ’ விரைவுச்சாலையில் தீப்பற்றிய கார்

1 mins read
922df5ec-14d0-468c-8915-22b9e9260879
காரின் இயந்திரத்தில் தீ மூண்டதாகவும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. - படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜிரோடு விஜிலான்டெ

காலாங்-பயா லேபார் விரைவுச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் தெம்பனிஸ் ரோடு வெளிவழிக்கு முன்பாக நடந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக அது கூறியது.

‘எஸ்ஜி ரோட் விஜிலான்டெ’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளியில் வெள்ளை காரின் முன்பகுதி தீப்பற்றி எரிவதைக் காணமுடிகிறது.

காரின் இயந்திரத்தில் தீ மூண்டதாகக் குறிப்பிட்ட குடிமைத் தற்காப்புப் படை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடர்வதாக அது கூறியது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்