சிராங்கூன் நார்த் வட்டாரத்தில் திடீரென்று தீப்பிடித்த வாகனம்

சிராங்கூன் நார்த் வட்டாரத்தில் திடீரென்று தீப்பிடித்த வாகனம்

1 mins read
6fce4ec6-6688-49c0-a889-bf255c163839
படம்: SGFOLLOWSALL/இன்ஸ்டாகிராம் -

சிராங்கூன் நார்த் அவென்யு நான்கில் வாகனம் ஒன்று திடீரென்று தீப்பிடித்தது. நேற்று இரவு 10.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வீரர்கள் முயன்றனர்.

புளோக் 539 சிராங்கூன் நார்த் அவென்யு நான்கில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த வாகனத்தில் தீப்பிடித்துக்கொண்டது. வாகனத்தின் இன்ஜின் பகுதியில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது. தீப்பிடித்த வாகனத்திற்கு அருகே இருந்த வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.