கேலாங் சாலையில் உள்ள கடைவீடு ஒன்றுக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) பிற்பகல் நேரத்தில் நடந்தது.
மற்றொரு வாகனத்தின்மீது மோதிய அந்தக் கார், தனது கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்துகுறித்த படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
அதில் சாம்பல் நிறத்தில் உள்ள ஹோன்டா கார் ஒன்று வீட்டுப் பொருள்களை விற்கும் கடையின் முன்புறம் மோதியிருந்ததைப் பார்க்க முடிந்தது. காரின் முன்பகுதி மோசமாகச் சேதமடைந்திருந்தது.
சம்பவம்குறித்து தங்களுக்குப் பிற்பகல் 12.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அதன்பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அது கூறியது.
விபத்து குறித்த காவல்துறையின் விசாரணையில் 39 வயது கார் ஓட்டுநர் உதவி வருகிறார்.

