கேலாங் இரவுச் சந்தையின் கடை மீது கார் மோதியதில் 66 வயது மாது உயிரிழந்தார்.
அந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி கேலாங் இரவுச் சந்தையில் செயல்பட்டுக் கொண்டிருந்த கடை மீது கார் மோதியது.
சர்கியுட் ரோடு புளோக் 52ஏ அருகே நடந்த சம்பவம் குறித்து இரவு 11.45 மணியளவில் தகவல் கிடைத்து அங்கு விரைந்ததாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாது இறந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.
காரை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு வயது நாற்பது. அபாயகரமாக காரை ஓட்டி மரணம் விளைவித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். கார் ஓட்டும் உரிமம், காப்புறுதி இல்லாமல் அவர் காரை ஓட்டியதாக நம்பப்படுகிறது.
காவல்துறை விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.
ஜூலை 12ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட படத்தில் ‘கெட்கோ’ கார் ஒன்று கடைக்குள் புகுந்து நின்றதை காண முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
இரவுச் சந்தை கடைமீது கார் மோதியிருந்தது.