போதையேறிய நிலையில் கார் ஓட்டிய 37 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘சிரிப்பு வாயு’ எனப் பேச்சுவழக்கில் அழைக்கப்படும் ‘நைட்ரஸ் ஆக்சைடு’ வேதிப்பொருளை நுகர்ந்து போதையேறிய நிலையில் அந்த ஆடவர், முன்யோசனையற்ற செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
சாமர்செட் ரோட்டில் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) கைது செய்யப்பட்ட அந்த ஆடவர், தற்போது காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.
ஆடவர் கைதுசெய்யப்பட்டதைப் படமெடுத்த வழிப்போக்கர் ஒருவர், அந்தப் படத்தை ‘ஷின்மின்’ நாளிதழுக்கு அனுப்பினார்.
இரண்டு காவல்துறை வாகனங்களுக்கு இடையே கறுப்பு நிற சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டதை அந்தப் புகைப்படம் காட்டுகிறது.
சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் ஐவரில் இருவர் ஒரு பெண்ணின் பக்கத்தில் நிற்பதும் கார் ஓட்டிய ஆடவரை எஞ்சியுள்ள அதிகாரிகள் முற்றுகையிடுவதும் புகைப்படத்தில் தென்படுகிறது.
அந்த ஆடவர் என்ன குற்றம் செய்தார் என்பதை ஷின்மின் செய்தி குறிப்பிடவில்லை.
‘மதர்ஷிப்’ தளம் அனுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர்க் காவல்துறை, கிலினி ரோட்டிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் உதவிகோரி அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை தொடர்கிறது.