கால்வாயில் விழுந்த கார்; மது போதையில் ஓட்டியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
d9702e40-f655-41a6-9bb3-b0c3b5d4441a
விபத்து வியாழக்கிழமை (ஜனவரி 30ஆம் தேதி) ஏறத்தாழ மாலை 5.00 மணிக்கு நிகழ்ந்தது. - படம்: ஃபேஸ்புக்

ஆடவர் ஒருவர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து அப்பர் பாய லேபார் ரோடில் உள்ள கால்வாயில் வியாழக்கிழமை (ஜனவரி 30ஆம் தேதி) விழுந்தது.

பிரேரா ரோடிலிருந்து கம்போங் அம்பாட்டை நோக்கிச் செல்லும் சாலைப் பகுதியில் மாலை ஏறத்தாழ 5.00 மணிக்கு விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.

காரை ஓட்டியவர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் நிலையில் அதை ஓட்டிய 55 வயது ஆடவர் பின்னர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குப் பின் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில் கால்வாயில் நீல நிற மெர்சிடிஸ் வாகனம் ஒன்று விழுந்து கிடந்தது தெரிகிறது. காருக்கு அருகே பாதசாரிகள் வசதிக்காக போடப்பட்ட தடுப்புகள் சேதமடைந்திருப்பது தெரிவதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்