பிடோக்கில் கவிழ்ந்த கார்

பிடோக்கில் கவிழ்ந்த கார்

படம்: எஸ்ஜி ரோடு விஜிலாண்ட்டே/ஃபேஸ்புக்

28 Nov 2025 - 9:37 pm

1 mins read

பிடோக் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்துக்கு அருகில் கார் ஒன்று கவிழ்ந்து கிடந்தது.

அந்த காரை 23 வயது ஆடவர் ஓட்டினார்.

கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இச்சம்பவம் வியாழக்கிழமை (நவம்பர் 27) நிகழ்ந்தது.

வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

புளோக் 514 பிடோக் நார்த் அவென்யூ 2க்கு அருகில் சறுக்கிச்சென்று, கவிழ்ந்த அந்த கார் பக்கவாட்டில் திரும்பியது.

சம்பவத்தில் இருவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.

கார் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
கார்விபத்துபிடோக்

தொடர்புடைய செய்திகள்