தோ பாயோ லோரோங் 2ல் ஏற்பட்ட வினோதமான விபத்து ஒன்று சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியுள்ளது.
தோ பாயோ புளோக் 84Cல் கார்களை நிறுத்தும் அடுக்குமாடிக் கட்டடத்துடன் பலபயன் மண்டபத்தை இணைக்கும் நடைப்பாதையில் சாம்பல் நிற கார் ஒன்று சிக்கிக்கொண்டது.
விபத்து குறித்து (மார்ச் 17) பிற்பகல் 3 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரை ஓட்டிய 55 வயது ஆடவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட மறுத்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
விபத்து எப்படி நடந்திருக்கும் என்று இணையவாசிகள் வியப்பைப் பதிவிட்டுவருகின்றனர்.
சிங்கப்பூரின் சாலை விபத்துகளைக் காட்டும் எஸ்ஜி ரோட் விஜிலாண்டே, ரோட்ஸ்.எஸ்ஜி ஆகிய சமூக ஊடகப் பக்கங்களில் பலர் கருத்துகளைப் பதிவுசெய்கின்றனர்.
காவல்துறை அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.