உட்லண்ட்சில் உள்ள கார் நிறுத்தம் இடம் ஒன்றில் விபத்து நேர்ந்தது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) கார் நிறுத்துமிடத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண் தனது கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் கார் தடம் புரண்டது. அதில் அவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்த பெண் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தார் என்று காவல்துறை தெரிவித்தது.
புளோக் 622A உட்லண்ட்ஸ் டிரைவ் 52ல் விபத்து ஏற்பட்டதாக அன்றையதினம் மாலை 6.50 மணிவாக்கில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
விபத்து குறித்த விசாரணையில் 41 வயது பெண் ஓட்டுநர் அதிகாரிகளுக்கு உதவி வருகிறார்.
விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அதில் கறுப்பு நிறத்திலான கார் ஒன்று அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது.

