மங்கோலியாவுடன் கரிம வர்த்தக ஒப்பந்தம்

1 mins read
5f8b923d-6c67-44f6-9686-4d3e4cd8e19d
சிங்கப்பூர் அரசாங்கமும் கரிம வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களும் கரிம வெளியீடுகளின் ஒரு பகுதியைக் குறைப்பதற்காகக் கரிம ஊக்கப் புள்ளிகளை மங்கோலியாவிடமிருந்து இந்த ஒப்பந்தம் மூலம் வாங்கலாம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருடன் கரிம வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அண்மைய நாடாக மங்கோலியா மாறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மிதவெப்ப மண்டல புல்வெளிகளின் தாயகமாக இருக்கும் மங்கோலியா உடனான இந்த ஒப்பந்தம், 2023ஆம் ஆண்டு இறுதியிலிருந்து கரிம ஊக்கப் புள்ளிகளைப் (carbon credit) பெறுவதற்காகத் தீவு செய்துகொண்ட பத்தாவது உடன்பாடாகும்.

இதன்வழி, சிங்கப்பூர் அரசாங்கமும் கரிம வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களும் கரிம வெளியீடுகளின் ஒரு பகுதியைக் குறைப்பதற்காகக் கரிம ஊக்கப் புள்ளிகளை மங்கோலியாவிடமிருந்து வாங்கலாம்.

சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான கிரேஸ் ஃபூவும் மங்கோலியாவின் பருவநிலை மாற்றம், சுற்றுப்புற அமைச்சர் பேட்பாட்டர் பேட்டும் இதற்கான ஒப்பந்தத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 6) கையெழுத்திட்டனர்.

சிங்கப்பூருக்கும் மங்கோலியாவுக்கும் இடையில் அரச தந்திர உறவு ஏற்பட்டு 55வது ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் இந்த உடன்பாடு கையெழுத்தானதாக அமைச்சர் ஃபூ கூறினார்.

குறிப்புச் சொற்கள்