டிபிஎஸ் வங்கியின் பேலா (Paylah) செயலி வைத்துள்ள சிங்கப்பூர் வாசிகளுக்குக் கேஷ் பேக் (cashback) சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது
உணவங்காடிகள், அக்கம் பக்க வட்டாரங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றில் பேலா மூலம் பணம் செலுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு ரொக்கச் சலுகை கிடைக்கும்.
இந்தச் சலுகையை ஜூலை 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதிவரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தக் காலகட்டத்தில் பேலா பயன்படுத்தும் முதல் 160,000 வாடிக்கையாளர்களுக்கு 3 வெள்ளி வரையிலான ரொக்கச் சலுகை கிடைக்கும்.
உணவங்காடி நிலையங்கள், ஈரச் சந்தைகள் என 22,000க்கும் அதிகமான கடைகளில் இந்தச் சலுகை கிடைக்கும்.
ஜூலை 12ஆம் தேதி காலை 8 மணிக்கு இந்தச் சலுகைத் திட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதாக டிபிஎஸ் வங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கேஷ் பேக் சலுகைத் திட்டத்தில் பங்குபெறும் கடைகள் அதன் கடைகளுக்கு வெளியே அடையாளங்களையும் குறியீடுகளையும் வைத்திருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
டிபிஎஸ் வங்கி அடுத்த மூன்று மாதங்கள் இதுபோன்று பல சலுகைகளை அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ரொக்கச் சலுகைகளை அறிவித்துள்ளது அந்த வங்கி. வாடிக்கையாளர்கள் பேலா செயலி கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.