‘ஏ’ பிரிவுக்கான வாகன உரிமைச் சான்றிதழின் (சிஓஇ) கட்டணம் 7.3 விழுக்காடு உயர்ந்தது. அதே நேரத்தில் ‘பி’ வகை சான்றிதழுக்கான கட்டணம் 2.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சிறிய மற்றும் குறைந்த சக்தி வாய்ந்த கார்கள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றிற்கான ‘ஏ’ பிரிவு சிஓஇ கட்டணம் $109,501 ஆக உயர்ந்தது. இது ஜனவரி 7ஆம் தேதி அன்று முடிவடைந்த முந்தைய நடவடிக்கையில் $102,009 ஆக இருந்தது.
இதற்கிடையே, பெரிய, அதிக சக்திவாய்ந்த கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான வகை ‘பி’ பிரிவு சிஓஇக்கான கட்டணம் $119,100லிருந்து $121,634 ஆக உயர்ந்தது.
பொதுப் பிரிவில், அதாவது ‘இ’ வகை பிரிவில், சான்றிதழ் கட்டணம் கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு குறைந்து $122,000லிருந்து $120,891 என்று பதிவானது.
வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவு சான்றிதழுக்கான கட்டணம் $75,202 ஆக பதிவானது. இது முன்பு $75,503 ஆக இருந்ததைவிட 0.4 விழுக்காடு குறைவு.
மோட்டார் சைக்கிளுக்கான ‘டி’ பிரிவு சிஓஇ கட்டணம் 2 விழுக்காடு உயர்ந்து $8,689லிருந்து $8,860 ஆக பதிவானது.

