‘ஏ’ பிரிவுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் (சிஓஇ), புதன்கிழமை (மே 7) முடிவுற்ற ஏலக் குத்தகையில் $103,009ஐ தொட்டது.
சிறிய, குறைவான ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான ‘ஏ’ பிரிவில் கட்டணம், ஏப்ரல் 23ஆம் தேதி இருந்த $99,500ஐவிட 3.5 விழுக்காடு அதிகரித்தது.
2024 அக்டோபருக்கு ($103,799) பிறகு இப்பிரிவில் கட்டணம் இந்த அளவைத் தொட்டிருப்பது இதுவே முதன்முறை.
பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான ‘பி’ பிரிவில் கட்டணம் 2.5 விழுக்காடு கூடி $119,890 ஆனது. இரு வாரங்களுக்கு முன்பு அது $117,003ஆக இருந்தது.
பொதுப் பிரிவுக்கான (‘இ’ பிரிவு) கட்டணம் 0.8 விழுக்காடு உயர்ந்து $118,889ஆகப் பதிவானது. முன்னதாக அது $118,001ஆக இருந்தது.
வணிகப் பிரிவுக்கான (‘சி’ பிரிவு) கட்டணம் $65,001லிருந்து 3.7 விழுக்காடு குறைந்து $62,590 ஆனது.
மோட்டார்சைக்கிள்களுக்கான (‘டி’ பிரிவு) கட்டணம் $9,309லிருந்து 6.4 விழுக்காடு சரிந்து $8,709ஆகப் பதிவானது.

