தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறிய கார்களுக்கான ‘சிஓஇ’ கட்டணம் புதிய உச்சம்

1 mins read
d97fa85e-6d7d-48ab-bb5c-dfdb346727f6
‘பி’ பிரிவுக்கான சிஓஇ கட்டணம், $127,501லிருந்து $136,890ஆக 7.4 விழுக்காடு கூடியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறிய கார்களுக்கான கட்டணம் $119,003 எனப் புதிய உச்சத்தை எட்டியது.

சிறிய, குறைந்த ஆற்றல் கொண்ட கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான ‘ஏ’ பிரிவுக் கட்டணம், செப்டம்பர் 3ஆம் தேதி பதிவான $107,889 என்ற முந்தைய சாதனையை முறியடித்தது. இது, 10.3 விழுக்காடு அதிகரிப்பைக் குறிக்கிறது.

பெரிய, அதிக ஆற்றல்வாய்ந்த கார்களையும் மின்சார வாகனங்களையும் பதிவுசெய்யப் பயன்படுத்தப்படும் ‘பி’ பிரிவுக்கான சிஓஇ கட்டணம் $127,501லிருந்து $136,890ஆக 7.4 விழுக்காடு கூடியது. இது, 2023 அக்டோபரில் பதிவான $150,001 என்ற உச்சத்துக்குப் பிறகு இப்பிரிவின் ஆக அதிகக் கட்டணமாகும்.

பொதுப் பிரிவு, வர்த்தக வாகன, மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணங்களும் அதிகரித்தன.

பொதுப் பிரிவு (‘இ’ பிரிவு) கட்டணம் முந்தைய ஏலத்தில் இருந்த $127,901லிருந்து 9.9 விழுக்காடு அதிகரித்து, $140,502ஆக உயர்ந்தது.

வர்த்தக வாகனங்களுக்கான (‘சி’ பிரிவு) கட்டணம் 1.3 விழுக்காடு அதிகரித்து, $71,556லிருந்து $72,501ஆக அதிகரித்தது.

மோட்டார்சைக்கிள்களுக்கான (‘டி’ பிரிவு) கட்டணம், இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவான $9,101ஐவிட 1.2 விழுக்காடு உயர்ந்து $9,209ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்