திரையரங்குகளை நடத்தும் கேத்தே சினிபிளெக்ஸஸ் நிறுவனத்திடம் இருந்து வாடகை பாக்கியாக $3.4 மில்லியன் வரவேண்டியுள்ளதாகக் கூறி அதற்கு சட்டப்படி கோரிக்கை விடுத்துள்ளது அந்த இடத்தின் உரிமையாளரான குளோபல் கமர்ஷியல் ரெய்ட் என்ற நிலச் சொத்து நிறுவனம்.
அந்த நிலச் சொத்து நிறுவனம் சிங்கப்பூர் பங்குச் சந்தை பதிவின்படி கேத்தே சினிபிளெக்ஸ் அந்தத் தொகையை ஜூலை 22ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
அந்தத் தொகைக்கு ஈடுசெய்யும் விதமாக நிலத்தின் உரிமையாளருக்கு திருப்தியளிக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம் என்றும் கேத்தே சினிபிளெக்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 22ஆம் தேதிக்குள் தொகையை கட்டத் தவறினால், கேத்தே சினிபிளெக்ஸால் தனது கடனைக் கட்ட முடியவில்லை என்று பொருள் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடனை திருப்பி அடைக்கும்வரை மாத வட்டியாக, 1 விழுக்காட்டுத் தொகையை செலுத்தும்படியும் கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.