$2.7 மில்லியன் வாடகை, நிலுவைத்தொகை கேட்டு கெத்தே திரையரங்குகளுக்குக் கடிதம்

1 mins read
செஞ்சுரி ஸ்குவேர், காஸ்வே பாயின்ட் ஆகிய இடங்களில் செயல்படும் திரையரங்குகள் தொடர்பில் நடவடிக்கை
775892f4-4042-4968-88a4-1f2f2aa34949
கெத்தே திரையரங்கு. - கோப்புப் படம்: சாவ்பாவ்

கெத்தே திரையரங்குகளுக்கு, 2.7 மில்லியன் வெள்ளி வாடகை, இதர நிலுவைத்தொகையைச் செலுத்தும்படி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

செஞ்சுரி ஸ்குவேர், காஸ்வே பாயின்ட் ஆகிய இடங்களில் செயல்படும் கெத்தே திரையரங்குகளின் தொடர்பில் இவ்வாறு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

பங்குச்சந்தையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 3) பதிவுசெய்யப்பட்ட தகவலில், கெத்தே திரையரங்குகளின் உரிமையாளரான எம்எம்2 ஏஷியா நிறுவனம், ஜனவரி 28ஆம் தேதி அந்தக் கடிதங்கள் கிடைத்ததாகக் கூறியுள்ளது.

அவ்விரு திரையரங்குகளும் செயல்படும் இடத்தின் சொந்தக்காரர்கள் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் அக்கடிதங்களை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெத்தே திரையரங்குகள் அதன் செஞ்சுரி ஸ்குவேர் திரையரங்கு தொடர்பில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஏறத்தாழ 480,000 வெள்ளியைச் செலுத்த வேண்டும் என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு கடிதத்தில், காஸ்வே பாயின்டில் உள்ள திரையரங்கு தொடர்பில் இரண்டு மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் செலுத்தும்படி கோரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் இத்தகைய இறுதி அறிவிப்புக் கடிதத்தை (Letter of demand) அனுப்புவது வழக்கம். அதில் கடிதத்தைப் பெறுபவர் நிறைவேற்ற வேண்டிய செயல்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாறு செய்யத் தவறினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்