அனைத்துத் திரையரங்கச் செயல்பாடுகளையும் நிறுத்தும் கேத்தே

1 mins read
0715eb78-1749-4a7c-83b9-98b500052a68
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட் மால் கடைத்தொகுதியிலிருந்து கேத்தே வெளியேறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேத்தே சினிபிளெக்சஸ் அதன் அனைத்துத் திரையரங்கச் செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளது.

திரையரங்குகள் செயல்படும் இடங்களுக்கு வாடகை தராமல் தடுமாறி வந்த கேத்தே சினிபிளெக்சஸ் கடன்களை அடைக்கப் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

அதையடுத்து திரையரங்கச் செயல்பாடுகளை நிறுத்துவதாகக் கேத்தே சினிபிளெக்சஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான எம்எம்2 ஏ‌ஷியா (mm2 Asia) திங்கட்கிழமை (செப்டம்பர் 1) கூறியது.

மேலும், எம்எம்2 ஏ‌ஷியா நிறுவனத்தின் நிதி அறிக்கைப்படி அது 101.3 மில்லியன் வெள்ளி நட்டத்தில் உள்ளது.

கடந்த சில மாதங்களாக கேத்தே நிறுவனம் திரையரங்குகள் செயல்படும் இடங்களுக்கு வாடகை தரவில்லை என்றும் வாடகைத் தொகை மில்லியனுக்கு அதிகமான தொகை என்றும் தகவல் வெளியானது.

கேத்தே, செஞ்சுரி ஸ்குவேர் கடைத்தொகுதிக்கும் காஸ்வே பாய்ண்ட் கடைத்தொகுதிக்கும் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வெள்ளி வாடகை வழங்கவில்லை.

மேலும் வெஸ்ட் மால் கடைத்தொகுதிக்கு ஏறத்தாழ ஒரு மில்லியன் வெள்ளி, ஜெம் கடைத்தொகுதிக்கு 3.4 மில்லியன் வெள்ளி வாடகை வழங்கவில்லை.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட் மால் கடைத்தொகுதியிலிருந்து கேத்தே வெளியேறியது. அதேபோல் மார்ச் மாதம் ஜெம் கடைத்தொகுதியிலிருந்து கேத்தே வெளியேறியது.

குறிப்புச் சொற்கள்