தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வாட்ஸ்அப்’பில் திரையைப் பகிரும்போது எச்சரிக்கை; மோசடிகளைத் தடுக்க ‘மெட்டா’ நடவடிக்கை

1 mins read
3a30ccc6-d19c-4919-8627-81b434bde3c7
மோசடிகளுக்கு எதிராகப் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய ‘மெட்டா’ நிறுவனம். - படம்: மெட்டா

சிங்கப்பூரர்களை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு புதிய அம்சத்தை ‘வாட்ஸ்அப்’ செயலியில் ‘மெட்டா’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, அறிமுகமில்லாத நபருடன் ‘வாட்ஸ்அப்’ காணொளி அழைப்பின்போது கைப்பேசி திரையைப் பகிரும் சமயங்களில் எச்சரிக்கை செய்தி தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு, சிங்பாஸ் அல்லது மின்னஞ்சல் விவரங்களைத் திரையைப் பகிர்வதன் மூலம் மோசடிப் பேர்வழிகள் காண்பது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான அரட்டைகளில் மோசடிகளைக் கண்டறியும் புதிய அம்சம் ஒன்றை ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் அது நிறுவியுள்ளது.

மோசடிக்கு எதிராக ‘மெட்டா’ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் இந்தப் புதிய அம்சங்கள் ஒரு பகுதி என அந்நிறுவனத்தின் சிங்கப்பூர், ஆசியான் பொதுக் கொள்கைப் பிரிவுக்கான தலைவர் கிளேரா கோ கூறினார்.

புதிய நடவடிக்கைகள் மோசடிகளுக்கு எதிரான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று மெட்டாவின் சிங்கப்பூர் மற்றும் ஆசியான் பொதுக் கொள்கைத் தலைவர் கிளாரா கோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்