‘தமிழ்க் கடல்மணி’ இராதாகிருஷ்ணனின் நூற்றாண்டு விழா

‘தமிழ்க் கடல்மணி’ இராதாகிருஷ்ணனின் நூற்றாண்டு விழா

1 mins read
a56d61cc-2e32-49ae-bae6-8e7a7a2c8cab
பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன். - படம்: இணையம்

பழம்பெரும் சொற்பொழிவாளர் ‘தமிழ்க் கடல்மணி’ இரா. இராதாகிருஷ்ணனின் நூற்றாண்டு விழாவையொட்டி, மார்சிலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழ் ஆன்மிக, இலக்கிய அறிஞர்களான சுகி சிவம், இலங்கை ஜெயராஜ், சுதா சேஷய்யன் முதலானோருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன்.

சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கும் இரு நிகழ்ச்சிகள், மார்சிலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள பன்முக அரங்கில் நடைபெறும்.

சனிக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்வில் பேராசிரியர் இரா. மாதுவின் தலைமையில், ‘சிக்கலான கதாபாத்திரங்களுள் கம்பனைச் சிக்கலுக்குள்ளாக்கிய கதாபாத்திரம் எது?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

அப்பட்டிமன்றத்தில், ‘கைகேயி’ என்ற அணியில் கோ. அரங்கபிரசாத், இராம்குமார் சந்தானம் ஆகியோரும், ‘வாலி’ என்ற அணியில் அர்ஜுன் நாராயணன், இராஜி ஸ்ரீநிவாசன் ஆகியோரும், ‘கும்பகர்ணன்’ என்ற அணியில் கங்கா, கண்ணன் சேஷாத்ரி ஆகியோரும் இடம்பெற்று, தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அல்ஜுனிட் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு பங்கேற்கிறார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது. அதில், புகழ்பெற்ற இலக்கியச் சொற்பொழிவாளர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ‘உயிர்நோக்கு’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்