தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஓஇ கட்டணம்: 4 மாதத்திற்குப் பின் எல்லாப் பிரிவுகளிலும் சரிவு

1 mins read
bb2a73b1-22ee-41e9-9a02-8ef003d49607
வர்த்தக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணங்கள் அதிகமாகச் சரிந்தன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் புதன்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற வாகன உரிமைச் சான்றிதழ் (COE) கட்டணத்தை முடிவு செய்வதற்கான ஏலத்தில் எல்லாப் பிரிவுகளிலும் சரிவு காணப்பட்டது.

ஜூன் மாதத்திற்குப் பின்னர் பதிவான முதல் வீழ்ச்சி இது.

சிறிய, ஆற்றல் குறைந்த கார்களையும் சிறிய மின்சார வாகனங்களையும் (EV) உள்ளடக்கிய ‘ஏ’ பிரிவில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் 0.9 விழுக்காடு குறைந்து $102,900 எனப் பதிவானது.

இதற்கு முன்பு அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் அந்தக் கட்டணம் $103,799 என முடிவடைந்தது.

பெரிய, ஆற்றல்மிக்க கார்களையும் பெரிய மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவில் $116,002 என்பதில் இருந்து 1.8 விழுக்காடு வீழ்ச்சி கண்டு $113,890 ஆனது.

பொதுப் பிரிவு என அழைக்கப்படும் ‘இ’ பிரிவில் 1.1 விழுக்காடு சரிவு பதிவானது. அதன் சிஓஇ கட்டணம் $116,000லிருந்து $114,700க்குக் குறைந்தது.

வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவின் கட்டணம் $75,009 என்பதில் இருந்து $72,939 என 2.8 விழுக்காடு சரிந்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களிலும் சரிவு பதிவானது. இதற்கு முந்திய ஏலத்தில் $10,001 என முடிவடைந்த நிலையில், புதன்கிழமை அது 4.1 விழுக்காடு சரிந்து $9,589 ஆனது.

குறிப்புச் சொற்கள்