இளையர்களை தங்களது நிறுவனங்களில் வேலைக்கு சேர்க்க சிங்கப்பூர் முதலாளிகள் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளனர்.
சமூக ஊடக செயலியான டிக்டாக்கை பயன்படுத்தி ‘ஜெரேஷன் ஸி’ என்று அழைக்கப்படும் இளைய தலைமுறையை நிறுவனங்கள் ஈர்க்கின்றன.
அழகான காணொளிகள் மூலம் டிக்டாக்கில் விளம்பரங்கள் செய்து இளையர்களின் கவனத்தை பெறும் நிறுவனங்கள் தங்களுக்கு இது பெரும் பயனாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
டிக்டாக் தளத்தில் அதிக அளவில் உணவு பான நிறுவனங்கள் வேலைகளை பதிவிடுவதாகவும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் #singaporejobs #sghiring என்ற ‘ஹேஷ்டேகுகள்’ மூலம் தங்களது காணொளிகளை பதிவிட்டு இளையர்களை எளிதில் சென்றடைய நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
உணவு பான நிறுவனங்கள் செய்வது போலவே பயணத்துறை, தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களும் தங்களிடம் உள்ள வேலைகளை டிக்டாக் தளத்தில் பதிவிடுகின்றனர்.
தங்களது வேலையிடங்கள் நீக்குபோக்கானது, பல வசதிகளை கொண்டது, வேலையிடத்தில் உள்ள கட்டமைப்புகள் உள்ளிட்ட பல தகவல்களை எளிமையாக காணொளிகளில் விளக்குகின்றன.
இது இளையர்களுக்கும் பிடித்த விதத்தில் இருப்பதால் பலரிடம் இருந்து வேலைக்கு விண்ணப்பங்கள் வருவதாக நிறுவனங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இளையர்கள் டிக்டாக் தளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். மேலும் அவர்களை புரிந்துகொள்ளவும் அவர்களிடம் நெருக்கமாகவும் இருக்க இந்த நடைமுறை உதவுவதாக நிறுவனங்கள் கூறுகின்றன.

